Pei Vali Kadigai - Horror Novel
பேஎய் வழி கடிகை – A Horror Novel
வகை: மர்மம், ஆமானுஷம், வரலாறு
ISBN: 978-967-17728-0-5
வெளியீடு: டிசம்பர் 2019
1946-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் சபாக் பெர்ணாம் காட்டு பகுதியில் ராணுவ முகாம் ஒன்று அமைக்கிறார்கள். அந்த முகாமில் மூன்று பேர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போகிறார்கள். அதே நேரத்தில், முகாம் இருக்கும் காட்டு பகுதியை ஒட்டி இருக்கும் எஸ்டேட்டில் இரண்டு இளம் பெண்கள் காணாமல் போய், கொலை செய்யப்பட்டு உடல் மட்டும் கண்டு பிடிக்கப்படுகிறது. அந்த எஸ்டேட்டில் ஒரு மந்திரவாதி இருக்கிறார். நடக்கும் அனைத்துக்கும் அந்த மந்திரவாதிதான் காரணம் என அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். இந்த கொலைகளை விசாரிக்க வரும் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரியின் மனைவிக்கு பேய் பிடித்து தற்கொலை செய்துக் கொள்கிறாள். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த ராணுவ முகாமை மூடி சீல் வைத்து விடுகிறார்கள். பிரச்சனையும் அத்தோடு முடிகிறது.
நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் அந்த முகாமை சீர் செய்து திறக்கிறார்கள். முன்னம் நடந்தது போலவே மீண்டும் சிலர் அந்த ராணுவ முகாமில் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். எஸ்டேட்டிலும் ஓர் இளம் பெண் காணாமல் போகிறாள். இந்த சம்பவங்களை தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் விசாரிக்க வரும் போலிஸ் சி.ஐ.டி-யின் காதலிக்கு பேய் பிடிக்கிறது. தாய்லாந்து நாட்டிலிருந்து வரும் தோக் குருவும், போலிஸ் சி.ஐ.டி-யும் சேர்ந்து, இந்த சம்பவங்களின் உண்மையான காரணங்களை கண்டுபிடித்து, அந்த மந்திரவாதிக்கும் ஒரு முடிவு கட்டுகிறார்கள்.
Instructor Biography
என் பெயர் மதியழகன். நாவலாசிரியர். இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன். ‘பேஎய் வழி கடிகை’ தலைப்பைக் கொண்ட இந்த நாவல்; மலேசியாவின் மிக உயரிய விருதான டான் ஸ்ரீ மாணிக்கவாசம் புத்தக விருதான ஏழாயிரம் ரிங்கிட் வென்றுள்ளது. எனது ஐந்தாவது நாவலான பிணையில்லாக் குற்றம் நாவலை மலாய் மொழியில் ’Sangkar Saksi' எனும் தலைப்பில் மொழி பெயர்ந்துள்ளேன். மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் நாவல் இது. எனது முதல் நாவலான நிலங்களின் நெடுங்கணக்கு நாவலை ‘masquerade - The Nusantara Insights' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் நாவல் இது.
Related Courses
Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.