Nilangkalin Nedungkanakku - Thriller Novel
நிலங்களின் நெடுங்கணக்கு(நாவல்)
வகை: மர்மர், திரில்லர்
கதை சுருக்கம்
துன் ஸ்ரீ லானாங் எழுதிய மலாய் சரித்திரத்தில் சொல்லப்படும் கெங்காயு என்கிற கோத்தா கெலாங்கி எனும் காணாமல் போன(Lost City) நகரத்தை தேடிக் கொண்டு சரித்திர ஆய்வாளர் செல்லதுரை என்பவர் மலேசியா வருகிறார். ஜொகூரில் இருக்கும் காடுகளில் புகுந்து தேடும் போது ஒருநாள் காணாமல் போய் விடுகிறார்.
சப்த கன்னிகள் தூக்கிக் கொண்டு போய் விட்டதாகவும், காட்டுப் பேய் அடித்துக் கொன்று விட்டதாகவும், தொப்பேங் ரகசிய குழு கடத்தி கொலை செய்து விட்டதாகவும்; செல்லதுரை காணாமல் போனது தொடர்பில் பல கதைகள் சொல்லப்படுகிறது.
இருபது வருடங்கள் கழித்து காணாமல் போன ஆய்வாளர் செல்லதுரையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு நந்தா விஜயன் எனும் இளம் வழக்கறிஞர் முயல்கிறார். செல்லதுரையோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை தேடிப் போகிறார்.
செல்லதுரை எப்படி காணாமல் போனார் என்பது குறித்து அவர் சந்திக்கும் மனிதர்கள், அவரவர் பார்வையில் விவரிக்கிறார்கள். செல்லதுரைக்கு ஏன் இது நடந்தது? அதன் காரணம் என்ன என்றும், செல்லதுரை காணாமல் போன பின்னணியில் இருக்கும் மர்மத்தையும் நந்தா விஜயன் தேடிக் கண்டுபிடிக்கிறார்.
இது ஒரு மர்மம், த்ரில்லர் வகை நாவல். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுத்தப்பட்ட கற்பனைக் கதை இது.
Instructor Biography
என் பெயர் மதியழகன். நாவலாசிரியர். இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன். எனது இரண்டாவது நாவலான ‘பேஎய் வழி கடிகை’ மலேசியாவின் மிக உயரிய விருதான டான் ஸ்ரீ மாணிக்கவாசம் புத்தக விருதான ஏழாயிரம் ரிங்கிட் வென்றுள்ளது. எனது ஐந்தாவது நாவலான பிணையில்லாக் குற்றம் நாவலை மலாய் மொழியில் ’Sangkar Saksi' எனும் தலைப்பில் மொழி பெயர்ந்துள்ளேன். மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் நாவல் இது. எனது முதல் நாவலான நிலங்களின் நெடுங்கணக்கு நாவலை ‘masquerade - The Nusantara Insights' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மலேசிய தமிழ் நாவல் இது.
Related Courses
Copyright © 2024 MindAppz Sdn Bhd. All rights reserved.